காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் அட்டைப் பெட்டி விலையை நாளை முதல் 20 சதவீதம் உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு

By செய்திப்பிரிவு

தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் கோவை, திருப்பூர் மாவட்ட அமைப்பு நிர்வாகிகள் அவசரக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

இதில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத் தலைவர் ஈ.வி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கரோனா தாக்கம் காரணமாக அட்டைப்பெட்டி உற்பத்தியின் முக்கிய மூலப் பொருளான காகிதத்தின் விலையும், மற்ற உப மூலப் பொருட்களான பசைமாவு, ஸ்டிச்சிங் பின் போன்றவற்றின் விலையும் கடந்த 3 மாதங்களாக அதிகரித்து வருகிறது. மேலும், தொழிலாளர் பற்றாக்குறையுடன், அவர்களது ஊதியமும், போக்குவரத்து செலவுகளும் உயர்ந்துள்ளன.

இதுதவிர, காகித ஆலை நிறுவனங்கள் அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்களுக்கு ரொக்கத்துக்கு மட்டுமே மூலப் பொருட்களை வழங்குகின்றன. ஆனால், வாடிக்கையாளர்களோ அதிகபட்சம் 90 நாட்களுக்கு மேல் பாக்கித்தொகை செலுத்துவதில்லை. இதனால் வரும் 15-ம் தேதி (நாளை) முதல் அட்டைப்பெட்டிகளின் விலையை தற்போதைய விலையிலிருந்து 20 சதவீதம் உயர்த்துவது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்