மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் கரோனாவால் காலமானார்

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.தங்கவேல் (69) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

தங்கவேல் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, இளம் வயதிலேயே பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, சிஐடியூ-வில் இணைந்தார். 1974-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக 2011 முதல் 2016 வரை இருந்தார்.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 29-ம் தேதி கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது சடலம் திருப்பூருக்கு கொண்டுவரப்பட்டு, ஆத்துப்பாளையம் சாலை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்