விழுப்புரம் அருகே தெளி கிராமத்தில் கோயில் பூசாரிக்கு சிலை வைத்து வழிபடும் கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே தெளி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தவர் வரதராஜூலு. இவரின் பரம்பரையினரே இக்கோயிலுக்கு தொடர்ந்து பூசாரிகளாக இருந்து வந்துள்ளனர். இக்கோயிலின் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும்.

வரதராஜூலு தன் 96வது வயதில், 2011-ம்ஆண்டு மறைந்தார். இவருக்கு பின், தற்போது கோயில் பணிகளை இவரது மகன்கள் கண்ணன், பக்தவத்சலம், நாராய ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் சிவன் கோயிலில் நந்தி, சிவலிங்கம், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் அருகே உள்ள பொது இடத்தில் சின்ன கோயில் ஒன்றில் மறைந்த பூசாரி வரதராஜூலுவின் சிலை வைக்கப்பட்டு கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

தந்தைக்கு அவரின் வாரிசுகள் சிலை வைத்திருப்பதும், அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டு அனைவரும் வணங்கு வதும் புதுமையாக இருந்தது.

இது குறித்து மறைந்த கோயில் பூசாரின் மகன்களில் ஒருவரான நாராயணனிடம் கேட்டபோது, “எங்கள் தந்தை இறை வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்.

அவர் விட்டுச்சென்ற பணிகளை நானும் என் சகோதரர்களும் செய்து வருகிறோம். அவருக்கு நாங்கள் கோயில் அமைத்தோம். அதனை கிராம மக்களும் ஏற்றுக்கொண்டு வழிபடுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றனர்.

இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, “ வரதராஜூலு பூசாரியின் பக்தியை கண்டு நாங்கள் ஆச்சர்யப் பட்டுள்ளோம்.

முக்காலத்தையும் உணர்ந்தவர் போல அவ்வப்போது அருள்வாக்கு சொல்வார். அவர் சொல்வது நடந்துள்ளது. அதனால் அவரை நாங்கள் வணங்குகிறோம்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்