கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் 

By பி.டி.ரவிச்சந்திரன்

இ பாஸ் விண்ணப்பித்துவிட்டு அனுமதி கிடைக்கும் முன் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் காத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இ-பாஸ் இன்றி அனுமதியில்லை என்ற நிலையில் இ பாஸ் பெற்றே அனுமதிக்கப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தினர் அடையாளஅட்டையைக் காண்பித்து பயணிக்க வேண்டும்.

இந்நிலையில் இன்று வாரவிடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார்களில் கொடைக்கானல் நோக்கி பலரும் புறப்பட்டுள்ளனர். இவர்கள் இ பாஸ் விண்ணப்பித்துவிட்டு அனுமதிகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஊரில் இருந்து புறப்பட்டுவந்துள்ளனர்.

கொடைக்கானல் நுழைவுவாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி டோல்கேட்டும் இவர்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை.

இதேபோல் நூற்றுக்கணக்கானோர் கார்களில் டோல்கேட் அருகே இன்று காலை முதலே காத்திருக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இ பாஸ் விண்ணப்பித்தால் மட்டும் போதாது, அதற்கு மாவட்டநிர்வாகத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டது என்ற பதில் வந்ததை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இ பாஸ் விண்ணபித்துவிட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் கிடைக்காததால் பலர் குடும்பத்துடன் காரிலேயே காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

வாரவிடுமுறையில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்ததால் மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் சுற்றுலாவருபவர்கள் இ பாஸ் விண்பித்துவிட்டு அனுமதி கிடைத்தால் மட்டுமே கொடைக்கானல் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்