நீட் தேர்வில் முழு விலக்கு வேண்டும் என்ற முழுமையான உரிமைக் குரலை தமிழக அரசு எழுப்பி வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தினார்
அதன்பின் அமைச்சர் கூறியதாவது:
இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கிறது. மாணவச் செல்வங்கள் எதையும் தைரியத்தோடு எதிர்கொண்டால் வெற்றி பெறலாம். நீட் தேர்வு மட்டுமே எதிர்காலம் இல்லை. பல்வேறு துறைகளில் சாதிக்கலாம்
மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி பூரண சுந்தரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உலகப் பார்வையை தன்பால் இழுத்து உள்ளார். இந்த மாணவி தொடர்ந்து தோல்வியை சந்தித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் பூர்ண சுந்தரியை போல் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி பெறலாம்
நீட் தேர்வில் முழுமையான விலக்கு வேண்டி உரிமைக்குரலை அதிமுக அரசு எழுப்பி வருகிறது. ஏழை எளிய சாமானிய மாணவர்களுக்கு நீட் தேர்வு சவால்கள் சாதாரணமானது அல்ல.
கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வை தமிழகம் முழுமையாக எதிர்க்கிறது. இதை கொண்டு செல்ல கால அவகாசம் தேவை
வல்லரசு நாடுகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் நோக்கு சரியாக இருக்கலாம். ஆனால் இதை எதிர் கொள்வதில் நமது தகுதியை வளர்த்துக் கொள்வதற்கான காலம் என்பது நமக்கு தேவைப்படுகிறது
வெற்றிக்கு முதல்படி நம்பிக்கையாகும் இந்த நம்பிக்கையுடன் நீட் தேர்வை எதிர்கொள்ள இன்னும் சில கால அவகாசம் நமக்கு தேவை உள்ளது ஆகவே நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக உள்ளது
நமது முதல்வரும் துணை முதல்வரும் மாணவ சமுதாயத்தின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர் அதனால் தான் அம்மா திட்டங்களான மடி கணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிமுக அரசு மாணவர் நலன் காக்கும் அரசு.
பொதுவாக மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் இன்றைக்கு உலகமே அச்சுறுத்தும் இந்தத் தொற்று நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் மருந்து இல்லாத நோய்க்கு நம்பிக்கையுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மேற்கொண்டதால் இன்றைக்கு நமது தமிழகத்தில் இதுவரை 88 சதவீதம் பேர் இந்த நோயினால் குணமடைந்து உள்ளனர் என்று கூறினார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago