நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பாதையில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால், விபத்தை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டுநர்கள் கவனத்துடன் பயணம் மேற்கொள்ளுமாறு வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தி லிருந்து நீலகிரி செல்லும் அனைத்து வாகனங்களும் குன்னூர் மலைப் பாதை வழியாகத்தான் பயணம் செய்ய வேண்டும். மலை அடி வாரத்திலேயே தொடங்கும் வனத்தையொட்டிய சாலைகளில், ஊரடங்கு அமலில் இருந்தபோது வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், மனித நடமாட்டமில்லாத இந்த சாலையில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன.
குறிப்பாக, யானைகள் பகல் நேரத்திலேயே சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன. தற்போது, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, வாகன போக்குவரத்துப் தொடங்கியுள்ள நிலையிலும், வன விலங்குகளின் நடமாட்டம் குறையவில்லை. இதனால், வாகனங்களில் விலங்கு கள் மோதி, விபத்து ஏற்படும் சூழலும்உள்ளது.
எனவே, "மலைப் பாதை யில் குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக, யானைகள் நடமாட்டம்உள்ள பகுதிகளில் ஒலி எழுப்பவோ,புகைப்படம் எடுக்கவோ கூடாது. மலைப் பாதையில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் விபத்து நேரிடும் என்பதால், வாகன ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் பயணம் மேற்கொள்ள வேண்டும்" என்று வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago