வாடிக்கையாளர்களின் செல் போன் எண்களை சேகரிக்குமாறு ஊழியர்களுக்கு ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாதாந்திர கார்டுகளின் பின்புறத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை கட்டாயமாக எழுதி வைக்கவேண் டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. ஆவின் பால் முறைகேடாக கடைகளுக்கு விற்கப்படுவதைத் தடுக்க இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.
தினசரி 21 லட்சம் லிட்டர்
தமிழக அரசு நிறுவனமான ஆவின், சென்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் மாதாந்திர அடிப்படையில் வாடிக்கையாளர் களுக்கு கார்டுகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகித்து வருகிறது. நகரில் உள்ள 16 மண்டல அலுவலகங்கள் மூலம் தினசரி சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 7 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. சில்லரைக் கடைகளுக்கு அனுப்பப்படும் பாலையும் சேர்த்து சென்னையில் மட்டும் 11.5 லட்சம் லிட்டர் அளவுக்கு ஆவின் பால் விற்கப் படுகிறது. இதுதவிர வெளிமாவட் டங்களில் 10 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது.
வழக்கமாக, கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ஆவின் பால் விலையை விட சற்று குறைவாகவே கார்டுதாரர்களிடம் மாதாந்திர கட்டணம் வசூலிக் கப்படுகிறது. இதனால் ஆவின் கார்டுகளுக்கு தனி மவுசு இருந்து வருகிறது.
பதிவேடுகளில் எண்கள்
ஆவினில் மூன்று ரகங்களில் விற்பனை செய்யும் அரை லிட்டர் பால், முறையே ரூ.13.50, ரூ.15.50 மற்றும் ரூ.17.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை, தனியார் பாலின் விலையைக் காட்டிலும் மிகக் குறைவானதாகும்.
இந்நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து மாதாந்திர அட்டையைப் புதுப்பிக்கச் செல்லும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை ஆவின் நிறுவன ஊழியர்கள் கேட்டுப் பெற்று பதிவேட்டில் எழுதி வரு கிறார்கள். அதுபோல், அவர்கள் வாங்கும் புதிய கார்டுகளின் பின்புறத்தில் செல்போன் எண் களை எழுதும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
லாபம் பார்க்கும் தனிநபர்கள்
இது குறித்து ஆவின் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:-
ஆவின் மாதாந்திர கார்டுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வர வேற்பு உள்ளது. சமீப காலங்க ளாக சில இடங்களில் மாதாந்திர கார்டுகளை வைத்து முறைகேடு கள் நடைபெறுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சில வாடிக் கையாளர்கள் ஊருக்குப் போகும் போது, அந்த வீட்டுக்கு சப்ளை செய்யும் நபரிடம் பால் கார்டை கொடுத்து விட்டுப் போகின்றனர். அவர்கள் அந்த கார்டுக்குரிய பாலை வாங்கி அதிக விலைக்கு கடைகளில் விற்றுவிடுகிறார்கள்.
வழக்கமாக, ஊருக்குச் செல் பவர்கள் ‘ஸ்டாப் சப்ளை’ என்று கோரி கடிதம் கொடுப்பார்கள். அவர்கள் வரும் வரை, சம்பந்தப் பட்ட பணிமனை ஊழியர் அவர் களுக்குரிய பாலை சில்லரை விலைக்கு விற்று ஆவின் நிர்வா கத்துக்குச் செலுத்திவிடுவார். ஆனால், அப்படி கடிதம் கொடுக் காமல் போவோரின் கார்டுகளை வைத்து, பால் சப்ளை செய்வோர் முறைகேடாக சம்பாதிக்கிறார்கள்.
மேலும், வீடு மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்வோர், கார்டுகளை பால் சப்ளை செய்வோரிடம் அப் படியே கொடுத்துவிட்டுச் சென்று விடுகின்றனர்.
அவர்கள் அதை வைத்து மாதா மாதம் பால் வாங்கி, நல்ல லாபத்துக்கு விற்றுவிடுகிறார் கள். இதனால் ஆவினுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் கிடைக் காமல் போகிறது. புதிய கார்டு வேண்டி மனு செய்திருக்கும் நபர்களுக்கு கார்டு கொடுக்க முடியாமல் போகிறது.
வாடிக்கையாளர் செல்போன் எண்களை நாங்கள் எழுதி வைத் திருப்பதால், பால் சப்ளை செய்யும் தனிநபர் மற்றவர்களின் கார்டு களை வைத்து பால் வாங்குவது பெரிதும் தடுக்கப்படும். அதனால் தங்களிடம் உள்ள தேவையற்ற கார்டுகளை அவர்கள் பயன்படுத் துவது குறையும். மேலும், எங்களது வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு பால் சப்ளை முறை யாக இருக்கிறதா, குறைகள் உள்ளனவா என்பதையும் விசா ரித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரி வித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago