சிறு, குறுந்தொழில்களுக்கு வழங்க நிர்ணயித்துள்ள அவசர கால கரோனா கடன்களை 100 சதவீதம் வழங்க வேண்டும் என்று மடீட்சியா தலைவர் பா.முருகானந்தம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் சிறு, குறுந்தொழில்களுக்கு ரூ.74 லட்சம் கோடிக்கு கரோனா கால கடன்களை வழங்கி அனுமதிக்கப்பட்டநிலையில் ரூ.45 லட்சம் கோடிக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல் தனியார் வங்கிகள் ரூ.76 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டநிலையில் ரூ.56 லட்சம் கோடி மட்டுமே வழங்கியுள்ளனர். கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டில் வெறும் 33 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது.
» செப்.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்
சமூக பொருளாதாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றில் சிறுதொழில்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
8-ம் தேதி கானொலி மூலம் சிறு, குறுந்தொழில்கள் சங்கங்கள், வணிக சங்கங்கள், வங்கியாளர்களுடன் சு.வெங்கடேசன் எம்பி கலந்துரையாடினார். அதில் அவர் , ‘‘மத்திய அரசு அறிவித்துள்ள அவசர கால கடன் வழங்க மதுரை மாவட்டத்திற்கு ரூ.606,04 கோடி
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் வங்கிகள் ரூ.283.37 கோடி கடன் வழங்கியுள்ளது. வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகை 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது’’ என்றார்.
அவரிடம் 100 சதவீதம் கடன் தொகையை வங்கிகள் மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு வழங்க வலியுறுத்தினோம். அவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் முறையிடுவதாக உறுதியளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago