8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார்.
விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான வேளாண் அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது
இந்த முகாமினை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், வேளாண்மை கல்லூரி முதல்வர் பால்பாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலை இயக்குனர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;
» மென்பொருள் நிறுவன ஊழியர் 8-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
» ஸ்டாலினா துரைமுருகனா கருணாநிதியா என்பதல்ல; இது இயக்கம்: துரைமுருகன் பேட்டி
நமது முதல்வர் விவசாயிக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்
தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணைக்கிணங்க இந்த வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எப்படி எதிர்கொள்வது என்பதும் வறட்சியான காலங்களில் பயிர்கள் சேதாரமில்லாமல் சமாளிப்பது என்பது தொடர்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சேதாரமில்லாமல் வெற்றி காண்பது என்பதும் இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு வழங்குவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
தமிழ்நாடு தொடர்ந்து 5 மாத காலமாக உணவு தானிய உற்பத்தியில் தேசிய அளவில் கிரிஷ் கருமான் விருதை பெற்றுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக விவசாய பெருங்குடி மக்களுக்கு இதுவரை 7,418 இப்படி தொகையை முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார் அவருக்கு உறுதுணையாக துணை முதலல்வர் இருந்து வருகிறார்
கூட்டுறவு வங்கி மூலம் இதுவரை 48 ஆயிரம் கோடி வரை விவசாயி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது
படை பூச்சி தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 186.25 கோடி ரூபாய் வரை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது.
முதல்வர் குடிமராத்து திட்டத்தின் மூலம் கடைமடைப் பகுதிகளில் தடையில்லாமல் தண்ணீர் கிடைத்ததால் இந்த ஆண்டு டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது
சேலம்,தேனி, மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் ,திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 10 ஏக்கரில் உணவு பதப்படுத்தும் மையங்கள் அமைக்க மத்திய அரசின் அனுமதியை அரசு பெற்றுள்ளது
தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் சிதம்பரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நெல் ரகங்களில் பாதுகாவலர் வரை நெல் ஜெயராமன் அவரின் நினைவை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது
பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யும் முறைகளான பசுமைக்குடில் சாகுபடி நிழல்வலை கொடி சாகுபடி பந்தல் சாகுபடி நிலப்போர்வை மற்றும் சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண்மை மண்டலத்திற்கான சட்ட முன்வடிவை முதன்முதலாக தாக்கல் செய்தவர் நமது முதல்வர் ஆவார்
நீர் வேளாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஓய்வு பெற்ற இரண்டு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மூன்று கண்காணிப்பாளர்களை ஒரு குழுவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் நியமித்துள்ளார்
அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கி வருகிறது. இதில் பெண் விவசாயிகள் டிராக்டர் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது அதேபோல் சிறு குறு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் கூறியதாவது:
8 மாதங்கள் இல்லை எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வகுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது. திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி
திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.
ஆனால் இன்றைக்கு முதல்வரும் துணை முதல்வரும் இந்தத் தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்கி தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அதன்மூலம் தமிழகத்தில் தொற்றுநோய் உள்ள 85 சதவீத நபர்களை குணப்படுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago