திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடக்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
குழந்தைகளுக்கு சத்தாண உணவை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதம் முழுவதும் போஸான் அபியான் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டம் வகுத்துள்ளது.இந்தாண்டுக்கான போஸான் அபியான் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க வழிவகை செய்யபப்பட்டுள்ளது.
அதன்படி கீரைகள்,பப்பாளி போன்ற இதமான காய்கறிகளை அமைக்க உள்ளோம். தோட்டக்கலைத்துறை,வேளாண்மை துறை இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
» நெல்லையில் கரோனா ஊரடங்கு விதிமீறல்: ரூ.2.24 லட்சம் அபராதம் விதிப்பு- மாநகராட்சி ஆணையர் தகவல்
» 40 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஆர்வலர்களால் தூர்வாரப்பட்ட ஊருணி: மீண்டும் குப்பை கொட்டும் மக்கள்
தற்போது உள்ள குழந்தைகளுக்கு சத்தாண உணவை வழங்க வேண்டும். அதே சமயத்தில் நல்ல பழக்க வழக்கங்களையும், கல்வியினையும்,புகட்ட வேண்டும், இதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், திருநெல்வேலி கோட்டாச்சியர் சிவ கிருஷ்ண மூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கணேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago