தமிழகத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கதிர்வேல் பணிபுரிந்து வந்தார். அவர் பதவி காலம் முடிந்ததையடுத்து குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இவர் மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றவர். 25 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ளார். இவர் 7 ஆண்டுகளாக பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலராகவும், சென்னை காமராஜர் துறைமுகத்தின் தனி இயக்குனராகவும் இருந்துள்ளார்.
» சசிகலா அல்ல வேறு எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
» வழக்கறிஞரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2014 முதல் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராக உள்ளார். இவரது கணவர் துளசி முத்துராம், தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை பொறியாளராக உள்ளார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
விக்டோரியா கவுரி உதவி சொலிசிட்டர் ஜெனரலாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago