ஐந்து மாதங்களுக்குப் பிறகு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் செப்.7-ம் தேதியில் இருந்து காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
இந்த ரயில் ஏற்கனவே அதிகாலை 5.05 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டது. தற்போது அதிகாலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து ரயில் புறப்படுகிறது.
அதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்கு பிறகு பல்லவன் ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்சசி அடைந்தனர்.
அதேபோல் ஏற்கெனவே ஒருநாள் இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த சென்னையில் இருந்து செங்காட்டை செல்லும் சிலம்பு ரயில், தற்போது தொடர்ந்து மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளது.
செப்.10-ம் தேதி முதல் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். காலை 9 மணிக்கு செங்கோட்டையை அடையும்.
அதேபோல் செப்.12-ம் தேதி முதல் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், இரவு 9.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago