அரசுப் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்ட நிலையில், தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படாமல், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்படாததால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்துசெல்லும் திண்டுக்கல் பேருந்து நிலையம் தளர்வுக்கு பிறகும் சகஜநிலைக்கு திருப்பாத நிலையே இன்று காணப்பட்டது.
கரோனா ஊரடங்கு தளர்வாக செப்டம்பர் 1 ம் தேதிமுதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட்டன. 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குரவத்து கழகம் அறிவித்தநிலையிலும் 30 சதவீத பேருந்துகளை இயக்கப்பட்டன.
பயணிகளும் அதிகளவில் பயணிக்கவில்லை. திண்டுக்கல் பேருந்துநிலையம் குறைவான பேருந்துகள், பயணிகள் என கூட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடியேகாணப்பட்டது.
இன்று முதல் போக்குவரத்தில் முழுமையாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கிடையும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை முதல் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இவையும் 50 சதவீதத்திற்கு குறைவான பேருந்துகளே இயங்கின. பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், நகரபேருந்துகள் என இயக்கப்பட்டநிலையில் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்ல மட்டும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பழநி, திருப்பூர், கரூர், தேனி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்தில் பயணிகள் அதிகளவு இல்லை.
நகரபேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு, சின்னாளபட்டி, நிலக்கோட்டை பகுதிக்கு செல்ல மக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.
தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை.
இயக்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் குறைவான அரசு பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அனைத்து பேருந்துகள் வந்துசெல்வது, மக்கள் அதிகளவில் பயணிப்பது என மீண்டும் திண்டுக்கல் பேருந்துநிலையம் சகஜநிலைக்கு திரும்ப சிலவாரங்கள் ஆகும் என்றே தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago