செப்.7 ‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்’ - சென்னைக்கான தூயக்காற்று திட்டத்தை அமல்படுத்த பாமக வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

செப்.7 இன்று ‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்’ உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்’ ( International Day of Clean Air for blue skies) செப்.7 அன்று கொண்டாடப்படுகிறது. காற்று மாசு, நுரையீரல் நோய், காற்று மாசினால் வரும் பிரச்சினைகளை எதிர்க்கொள்ள ஐநா இந்த நாளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நீல ‘வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்’ ( International Day of Clean Air for blue skies) அனுஷ்டிக்கப்படுவதை அடுத்து சென்னையில் காற்று மாசை குறைக்க சென்னைக்கான தூயக்காற்றுத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உரிய திட்டத்தை தீட்ட பாமக வலியுறுத்தியுள்ளது.

நேற்று பாமக கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான கோரிக்கையை ஒரு தீர்மானமாக நிறைவேற்றினர். அதுகுறித்த விபரம் வருமாறு:

“சென்னை மாநகரில் காற்று மாசு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காற்று மாசு காரணமாக நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 100 மடங்கு அதிகமாக, அதாவது 935 என்ற அளவில் உள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும். இதை 40 மைக்ரோகிராம் என்ற அளவில் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதற்காக, சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Chennai Clean Air Action Plan) உடனடியாக உருவாக்கி, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தவேண்டும். அதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. செப்டம்பர் 7-ஆம் நாள், ‘‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் ( International Day of Clean Air for blue skies)’’ என ஐநா அவையால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்”.

இவ்வாறு பாமக கோரிக்கை வைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்