சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

By இ.மணிகண்டன்

சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்க அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் சிவகாசியில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று காலை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த புதிய அதிநவீன 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் 2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் வென்டிலேட்டர், மாரடைப்பு ஏற்படும் போது உயிர்காக்கும் மருத்துவ உபகரனங்கள், அனைத்து உயிர் காக்கும் மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் அனைத்து அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனையாக இந்த வாகனங்களில் வசதிகள் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடக்க விழாவில் கலெக்டர் கண்ணன், சுகாதாரதுறை இணை இயக்குநர் மனோகரன், சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன், டாக்டர் அய்யனார், அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், நகர செயலாளர்கள் அசன்பதூரூதீன், பொன்சக்திவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட சிறுபாண்மையினர் அணி செயலாளர் செய்யது இப்ராஹீம், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி் மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்