சாலையோர, நரிக்குறவர் குழந்தைகளுக்கு இலவச கல்வி, இசைப் பயிற்சி: புதுச்சேரியில் சேவையாற்றும் ஜாலி ஹோம்

By அ.முன்னடியான்

வறுமையின் பிடியில் சிக்கி செம்பட்டை முடி, அழுக்கு மேனி என சுற்றித்திரியும் சாலையோரம் வசிக்கும் சிறுவர்கள், நரிக்குறவர் குழந்தைகளை பார்த்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதையும், பலவித இசைக் கருவிகளை இசைப் பதையும் புதுச்சேரியில் உள்ள ‘ஜாலி ஹோமில்’ காண முடிகிறது. புதுச்சேரி கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் ‘ஜாலி ஹோம்’ என்ற சமூக தொண்டு நிறுவனத்தில் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகள் மற்றும் நரிக்குறவர்களின் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். நரிக்குறவர் குழந்தைகள் அதிகம்.

இங்குள்ள குழந்தைகள் தினந் தோறும் பள்ளி சென்று வந்ததும், ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, யோகா, உடற்பயிற்சி, கணினி பயிற்சி, நடனம், இசைக் கருவி, ஓவியம் வரைவது உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகி றது. அவர்களும் ஆர்வத்துடன் கற் றுக் கொண்டு சகலகலா மாணவர் களாக உருவாகி வருகின்றனர். இதுகுறித்து ‘ஜாலி ஹோம்’ நிறு வனர் புருனோ, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நான் ஒரு விளம்பர படத் தயாரிப் பாளர். ஆரம்பத்தில் சென்னையில் வேலை செய்தேன். கடந்த 2006-ம் ஆண்டு புதுச்சேரி வந்தேன். இங்கு சாலையோரங்களில் வசிக்கும் குழந்தைகள் ஒரு வேளை உண வுக்குகூட கஷ்டப்படுவதை பார்த் தேன். அவர்களுக்கு சாப்பாடும் வழங்கி, கல்வியையும் அளிக்க வேண்டும் என எண்ணினேன். அதற் காக தினசரி மையத்தை தொடங்கினேன்.

ஒரு ஆம்னி வேனில் அவர்களை அழைத்து வந்து கல் வியை போதித்தோம். அப்போது, எங்களை பார்த்தால் ‘பிள்ளை புடிக்கறவங்க வர்றாங்கடா’ன்னு சொல்லிக்கிட்டு பசங்க ஓடியது இன்றளவும் நினைவில் நிற்கிறது.

எனினும், குழந்தைகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற் படவில்லை. தங்க இடமில்லாமல், தினந்தோறும் கிடைக்கும் இடத்தில் வசித்து வந்ததே அதற்கு காரணம். இதையடுத்து, அந்த குழந்தைகள் தங்கி படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்தோம். அதன் மூலம் உருவானதே ‘ஜாலி ஹோம்’. ஸ்பெயினில் உள்ள ஜால் நிறுவனம் மற்றும் புதுச்சேரி யைச் சேர்ந்த ரமணிகாந்த் ஆகியோரின் உதவியால் புதிய கட்டிடம் உள்ளிட்ட வசதிகள் கிடைத்தன.

பெரும்பாலான இல்லங்களில் ஆதரவற்ற, சிறப்பு குழந் தைகளுக்காகவே கவனம் செலுத் துகின்றனர். நரிக்குறவர் குழந்தைளை பற்றி யாரும் நினைப்பதில்லை. எனவேதான், லாஸ் பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து இங்கு தங்க வைத்து படிக்க வைக்கிறேன்.

திப்புராயப்பேட்டை யில் உள்ள சத்யாலயம் பள்ளியில் 96 பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்துள்ளோம்.

நரிக்குறவ மாணவி ஒருவர் நேரடியாக 7-ம் வகுப்பில் சேர்ந்து படித்து கடந்த ஆண்டு 10-ம் வகுப்பில் 346 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பள்ளி முடிந்து வரும் இவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். இத னால் அவர்களது வாழ்க்கை நிலை மாறியுள்ளது. நரிக்குறவர்களின் குழந்தைகள் நல்ல ஆடை அணிந்து ஆங்கிலம் பேசுவதை பார்த்து அவர்களது பெற்றோர்கள் வியப்படைந்துள்ளனர்.

ஹோமில் இருப்போர் தவிர, நரிக்குறவர் காலனியில் உள்ள பிள் ளைகளும் பள்ளிக்கு செல்வதில் கவனமுடன் செயல்படுகிறோம். ஊசிமணி, பலூன் விற்பனை செய்வதன் மூலம் வாழ்க்கை நடத்த முடியாது என்பதால் நரிக்குறவர் மக்களுக்கு தையல் மற்றும் புதுவிதமான மணிகள் செய்யும் பயிற்சிகளை அளிக்கிறோம்.

அவர்கள் தொழில் தொடங்க கடன் உதவியும் செய்கிறோம். புதுச்சேரி மற்றும் திருச்சியில் எங்களது சமூக தொண்டு நிறுவனம் உள்ளது. இதன் மூலம் 186 பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்