தூத்துக்குடி, குமரி, தென்காசியில் குறைந்த நிலையில் நெல்லையில் குறையாத கரோனா தொற்று பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரையில் கரோனாவால் 10,067 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 8,760 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 101 பேர் குணமடைந்தனர். 1,249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,999 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 649 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 47 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,680 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 95 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 10,856 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் நேற்று ஒருவர் உட்பட இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 10,099 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மொத்தம் 9,178 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 5 பேர் மரணமடைந்தனர். மொத்த உயிரிழப்பு 193 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்