திருப்பூர், கோவை, நீலகிரி, உட்பட தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில், அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழைதொடங்குகிறது. மழைக்காலங்களில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், நோய்கள் மற்றும் சில பூச்சிகளின் தாக்கம் அதிகமாகி, பயிர்கள் சேதமடையும். இதனால் சாகுபடி பாதிக்கப்படும். செடிகள் நீரில் மூழ்கி இறக்கும். வெள்ளம் சூழ்ந்த 24 மணி நேரத்தில்ஆக்ஸிஜன் அளவு பூஜ்ஜியத்துக்கு செல்கிறது. மண் துகள்களுக்கு இடையே உள்ள காற்று வெளிகளில் தண்ணீர் நிரம்பிவிடுவதால், வேர்களுக்கு ஆக்ஸிஜன் சென்றடைவதில்லை. இதனால், வேரின் வளர்ச்சி தடைபடுகிறது.
வேர்கள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன்தேவை. 48 மணி நேரத்துக்கு குறைவாகவெள்ளம் நீடித்தால், காய்கறிப் பயிர்கள் உயிர்பிழைக்கும். நேரம் அதிகரிக்கும்போது வேர்கள் இறந்து, பயிர்கள்பிழைப்பதும் கடினமாகிவிடுகிறது.இதனால்,விவசாயிகள் ஆண்டுதோறும் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் மழைக் காலங்களில் காய்கறிப் பயிர்களை காப்பது தொடர்பாக, பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் க.வி.ராஜலிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ஆனந்தராஜா ஆகியோர் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:
இலைகள் மஞ்சளாகி, வாடி உதிர்ந்துவிடும். செடியைப் பிடுங்கினால் வேரானது கறுப்பாக, மென்மையாக, கனமாக இருக்கும். அழுகிய முட்டை வாசத்துடன், சேறும், சகதியுமாகமண் இருக்கும். செடியின் வளர்ச்சி குன்றி இருக்கும். ஈரமான, சகதி நிறைந்த இடங்களில் நீர் வழிந்தோடுவதால் உப்பு படிதல் மற்றும் இதர மாசுபாடுகளால் மண் மாசுபடுவதும் அறிகுறிகளாகும்.
தடுப்பு முறைகள்
வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடிக்க வேண்டும். ஈர மண்ணில் நடந்தால்,மண் இறுக்கத்தை மேலும் கூட்டும்.இறந்த செடிகளை பிடுங்கி, பாதிக்கப்பட்ட செடியின் பாகங்களை அகற்றவேண்டும். மேட்டுப்பாத்தி அமைத்துசாகுபடி செய்ய வேண்டும். தாழ்வானஇடங்களில் வேளாண்மை செய்யாமல்வழிந்தோடும் நீரை சேமிக்க வேண்டும்அல்லது வழிந்தோடும் நீரை நிலத்துக்குவெளியே அனுப்ப வேண்டும். நிலங்களில் ஆங்காங்கே சிற்றோடைகள் அமைக்க வேண்டும்.
பாத்திகளில் விதைப்பு
கத்தரி,வெண்டை, பூசணி, பாகல், சாம்பல் பூசணி, வெள்ளரி, சுரை, மெழுகு பீர்க்கன்காய், காய்கறி தட்டை, கோவக்காய், சேப்பங்கிழங்கு, கோழி அவரை, தவசிக் கீரை, தண்டுக்கீரையில் பூசா கிரன் என்ற ரகம் ஆகியவை, மழையை ஓரளவு தாங்கி வளரக்கூடியவை. பயிர்களை பாத்திகளில்விதைக்கவேண்டும். தக்காளியில் வீரியஒட்டு ரகங்களுக்கு இரண்டு மீட்டர்உயரமுள்ள மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். இதனால், மழைக் காலங்களில் ஈர மண்ணால் அழுகுவது தவிர்க்கப்படுகிறது.
கொடிவகை காய்கறிகள்
கொடி வகைக் காய்கறிகளில் பூசணி,தர்பூசணி போன்றவை மண்ணில் படர்வதால் மழைக்காலங்களில் அழுகிப்போக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கமண்ணை தொடும் இடத்தில் காய்ந்த சருகுகளை இட்டு, அதன் மேல்காய்களை வளரவிட வேண்டும். பயிர்களை குழியில் நடாமல், உயர்ந்த குன்றுகளில் நட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மண்ணைகொத்தி விடுவதன் மூலமாக, செடிகளுக்கு காற்றோட்டம் கிடைப்பதால் தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்கிறது. நடவு செய்த அல்லது விதைத்த 30நாட்களில் மண் அணைக்க வேண்டும்.மழைக்காலங்களில் மண்அரிப்பினால் காய்கறிப் பயிர்களில் தழைச் சத்தானதுஅடித்துச் செல்லப்படும். எனவே,ஏக்கருக்கு 23 கிலோ தழைச்சத்தைமழைக்காலம் முடிந்த பிறகு செடிகளுக்குப் பக்கத்தில் இட வேண்டும்.
இலை வழியாக யூரியா
தக்காளிக்கு ஒரு சதவீத யூரியாவை10 நாட்கள் இடைவெளியில் இலைவழி அளிக்க வேண்டும். இது, பூக்களில்மகரந்தத்தை அதிகப்படுத்தி, காய்களின்எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது. இதரப் பயிர்களுக்கு 3 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிக்கலாம். மண்ணில்இடுவதைவிட இலைவழி அளித்தலே சிறந்தது. மழைக்காலங்களில் தழைச்சத்தை நைட்ரேட் வடிவில் (கால்சியம்நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட்)இடாமல் அம்மோனியா வடிவில்( அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு) இட வேண்டும்.
மழை முடிந்தவுடன் 0.3 சதவீத போரிக்அமிலம், 0.5 சதவீத துத்தநாக சல்பேட், 0.5 சதவீத இரும்பு சல்பேட் மற்றும் ஒரு சதவீத யூரியாவைத் தெளித்து பயிர்களை செழிக்கச்செய்யலாம். மேலும், விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தை 9443444383 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago