போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றித் தருவார் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினரில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவையான கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றித் தரும் முதல்வர், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார்.

எனவே, ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அனைத்து ரேஷன்கடைகளுக்கும் உணவுப்பொருட்கள் சீராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்