விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக கண்மாயில் மணல் அள்ளியவரை 5 கி.மீட்டர் தூரம் வருவாய்த்துறையினர் துரத்திச்சென்றுப் பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் உள்ள கடம்பன்குளம் கண்மாய் உள்ளது.
அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக சிலர் மணல் அள்ளுவதவாக சிவகாசி சார்-ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சார்-ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் கடம்மன் குளம் கண்மாயில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அதிகாரிகள் வருவதைக் கண்டு அங்கு ஜேசிபி இந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் தப்பியோடினர். மேலும், மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை அதன் ஓட்டுநர் வேகமாக ஓட்டிச்சென்றார்.
» சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும்: ராமநாதபுரம் புதிய காவல் கண்காணிப்பாளர் தகவல்
அச்சன்குளத்திலிருந்து சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை வழியாக சுமார் 5 கி.மீட்டர் தூரம் அவரை வருவாய்த்துறை அதிகாரிகள் துரத்திச்சென்று மடக்கிப் பிடித்து ஓட்டுநர் லட்சுமணபிரபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து லட்சுமணபிரபுவைக் கைதுசெய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago