புதுச்சேரியில் புதிதாக 408 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் 18 பேர் உயிரிழப்பு: 300-ஐ எட்டிய இறப்பு எண்ணிக்கை

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 408 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 566 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 298 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 5) கூறும்போது, "புதுச்சேரியில் 1,437 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 343, காரைக்காலில் 25, ஏனாமில் 32, மாஹேவில் 8 என மொத்தம் 408 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 15 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரைச் சேர்ந்த 82 வயது முதியவர், நெல்லித்தோப்பு பெரியார் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 53 வயது ஆண் ஆகிய இருவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், லாஸ்பேட்டை ராஜாஜி நகரைச் சேர்ந்த 61 வயது முதியவர், வீரம கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 72 வயது முதியவர், குருவிநத்தம் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய மூன்று பேரும் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொசப்பாளையம் வாணிதாசன் வீதியைச் சேர்ந்த 53 வயதுப் பெண், சாரம் லட்சுமி நகரைச் சேர்ந்த 57 வயது ஆண், அரியாங்குப்பம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த 47 வயதுப் பெண், காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், முத்தியால்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, கருவடிக்குப்பம் வரதராஜூ பிள்ளை நகரைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தனர்.

கருவடிக்குப்பம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த 62 வயது முதியவர், சின்னையாபுரம் கதிர்வேல் வீதியைச் சேர்ந்த 43 வயது ஆண் ஆகிய இருவரும் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியிலும், கல்மண்டபத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியிலும், பாலாஜி நகரைச் சேர்ந்த 73 வயது முதியவர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரைக்கால் பிரான்சிஸ் சேவியர் வீதியைச் சேர்ந்த 46 வயதுப் பெண் காரைக்காலிலும், ஏனாம் தோட்டா வீதியைச் சேர்ந்த 65 வயது முதியவர், ஏனாம் ஜிக்ரிஸ் நகரைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.80 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரத்து 566 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 3,158 பேர், காரைக்காலில் 119 பேர், ஏனாமில் 122 பேர் என 3,399 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,469 பேர், காரைக்காலில் 86 பேர், ஏனாமில் 174 பேர், மாஹேவில் 33 பேர் என மொத்தம் 1,762 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,161 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குறிப்பாக, இன்று புதுச்சேரியில் 361 பேர், காரைக்காலில் 48 பேர், ஏனாமில் 24 பேர் என மொத்தம் 433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 107 (67.05 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 81 ஆயிரத்து 695 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 63 ஆயிரத்து 545 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியில்லாததால் 65.85 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தொற்று[ப் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று 20 பேர், இன்று 18 பேர் என கடந்த 2 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது சுகாதாரத்துறைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்