ஓசூர் வழியாக தமிழகத்துக்குள் வரும் வாகனங்களில் இ-பாஸ் சரி பார்க்க தாமதம் ஏற்படுவதால் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க, தமிழகத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்பவர்களும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசு மாவட்டங்களுக்குள் செல்ல இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து தமிழகத் துக்குள் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகள் வழியாக தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ் பெற்று வருகின்றனரா என காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என ஓசூர் அருகே ஜூஜூவாடியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் சரி பார்க்கப்படுகிறது. இந்த சோதனைச்சாவடியில் இ-பாஸ் சரி பார்க்க தாமதம் ஏற்படுவதால், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அத்திப்பள்ளி சோதனைச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இ-பாஸ் சரி பார்க்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக கூடுதல் அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago