பள்ளி மாணவர்களுக்கு 23,000 திருக்குறள் புத்தகங்களை ஓய்வூதிய பணத்தில் வழங்கிய முதியவர்: 17 ஆண்டுகளாக அறநெறியை பரப்புகிறார்

By கல்யாணசுந்தரம்

கடந்த 17 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்த கங்களை வழங்கியும், அறநெறி வகுப்புகளை நடத்தியும் மாணவர் களிடையே நற்கருத்துகளைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளார் திருச்சியைச் சேர்ந்த கரு.பேச்சிமுத்து (73).

திருச்சி திருவெறும்பூர் அருகே யுள்ள குமரேசபுரத்தில் வசிக்கும் இவர், பெல் நிறுவனத்தில் முது நிலை மேலாளராகப் பணியாற்றியவர். 1998-ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், மாணவர் களை நல்வழிப்படுத்தும் கருத்து களைப் பரப்புவதில் கடந்த 17 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

சமுதாயத்தில் தற்போது பல்வேறு காரணங்களால் இளைய தலைமுறையினர் பலரும் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியாக இந்தப் பணியை செய்து வருவதாகக் கூறுகிறார் பேச்சிமுத்து.

பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு திருக் குறள் புத்தகங்களை வழங்கி வரும் இவர், திருக்குறளின் பெருமை களை மாணவர்களிடம் விளக்கு கிறார். மேலும், திருக்குறள் ஒப்புவிப் பவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ஒரு குறளுக்கு ரூ.1 பரிசு வழங் குகிறார். கடந்த 17 ஆண்டுகளில் தமிழகம் முழுவதுமுள்ள மாணவர் களுக்கு 23,000 திருக்குறள் புத்த கங்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேச்சிமுத்து கூறியதாவது: ‘‘இளைய தலைமுறையினரை நல்ல மனம், மொழி, மெய்த்திறனோடு வாழ வழிகாட்டும் நோக்குடன் இந்தப்பணியை தொடர்ந்து செய்து வருகிறேன்.

முதலில் திருக்குறளை மட்டுமே புத்தகமாக அச்சிட்டு வழங்கி வந்தேன். அடுத்தடுத்த பதிப்புகளில், பண்பட்ட மாணவர்களை உருவாக் கும் வகையில் திருக்குறளோடு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்நெறி, உலகநீதி ஆகியவை அடங்கிய ‘திருக்குறள்- ஏழிளந் தமிழ்’ என்ற 220 பக்க புத்தகத்தை தயாரித்து வழங்கி வருகிறேன்.

இவற்றுக்கு எனது ஓய்வூதியப் பணத்தில் இருந்துதான் செலவிடு கிறேன். ஒரு புத்தகத்தை அச்சிட ரூ.15 செலவாகிறது. பணம் முக்கி யமல்ல. எனது இரு மகன்கள், மகள் நன்றாக இருக்கின்றனர். ஓய்வூதியப் பணத்தை நல்வழியில் தான் செலவிட வேண்டும், சமு தாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பித்தான் இந்த பணியை செய்து வருகிறேன். இதுவரையில் தமிழகம் முழுவதும் 800 பள்ளிகளுக்குச் சென்று, 23,000 மாணவ, மாணவியருக்கு இந்த புத்தகங்களை வழங்கியுள்ளேன்.

பள்ளிகளுக்குச் செல்லும்போது, தாய், தந்தை, ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட அறநெறிக் கருத்துகளை மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் எடுத்துரைத்து, பின்னர் இந்த புத்தகங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறேன். இதுதவிர, கண்தானம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத் தையும் வலி யுறுத்தி வருகிறேன்.

தற்போது புதிதாக 10,000 புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன. இதற்காக யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை, கொடுத்தாலும் வாங்குவதில்லை என்பதில் உறுதி யாக இருக்கிறேன்’’ என்றார்.

ஓய்வு பெற்ற பின்னர் பொழுதை எப்படி கழிப்பது எனத் தெரியாமல் இருக்கும் முதியவர்கள் மத்தியில், இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் பேச்சிமுத்துவின் பணியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்