கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல் 

By பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானலுக்கு மட்டும் இ பாஸ் முறையால் தனித்தீவாக மாறியுள்ளது. இதை ரத்தசெய்து சுற்றுலாபயணிகளை அனுமதித்து கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், என ஓட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கசெயலாளர் அப்துல்கனிராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த மார்ச் 26 ம் தேதி அமல்படுத்தப்பட்ட கரோனா ஊரடங்கு, பல்வேறு கட்டங்களாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இதுவரை சுற்றுலாபயணிகளை அனுமதிக்காததால் சுற்றுலாபயணிகளை மட்டுமே நம்பிவாழும் கொடைக்கானல் இன்னமும் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்கமுடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தின் அனைத்துபகுதிகளுக்கும் இ பாஸ் முறை ரத்துசெய்யப்பட்டநிலையில் கொடைக்கானல் வருபவர்களுக்கு மட்டும் இ பாஸ் என்ற நடைமுறை கொடைக்கானலை தனித்தீவாக மாற்றியுள்ளது.

சுற்றுலாபயணிகளை மட்டுமே நம்பி நடந்துவரும் ஓட்டல் தொழில்கள், சுற்றுலாத்தலங்களில் கடைவைத்திருக்கும் சிறு மற்றும் குறு வியாபாரிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட செலவிற்கே அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மற்ற ஊர்களோடு கொடைக்கானலை ஒப்பிட்டு பார்க்கமுடியாது.

காரணம் இங்கு நடைபெறும் அனைத்து தொழில்களும் சுற்றுலாபயணிகளை நம்பியே உள்ளது. எனவே தமிழக அரசு கொடைக்கானலுக்கான இ பாஸ் முறையை ரத்துசெய்வதுடன் சுற்றுலாபயணிகளை அனுமதிக்கவேண்டும். கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களையும் திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையாக பின்பற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.

25 சுற்றுலாபயணிகள் வீதம் சுற்றுலாத்தலங்களில் அனுமதித்து அவர்கள் வெளியேறிய பின்னர் அடுத்த சுற்றுலாபயணிகளை அனுமதிப்பது என கட்டுகோப்புடன் கரோனா பரவாமல் தடுக்க சமூக அக்கறையுடன் செயல்படுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். கொடைக்கானல் மக்களின் நிலையை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்