இ-பாஸ் இன்றி தடையை மீறி கொடைக்கானலுக்குச் செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை வெள்ளி நீர்வீழ்ச்சி டோல்கேட்டில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் பங்களா, வீடுகள் வைத்துள்ள வெளிமாவட்டத்தினர் கடந்த ஐந்து மாதங்களாக தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாததால் அவற்றைப் பராமரிப்பது உள்ளிட்ட பிற பணிகளுக்காக கொடைக்கானல் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இதேபோல் கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தவர்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்க கொடைக்கானல் செல்ல முடிவு செய்து இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.
இதுவரை கொடைக்கானல் செல்ல முறையாக இ-பாஸ் பெற விண்ணப்பித்தவர்களுக்கு யாரும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலையில் பல வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பாதையில் சென்றன.
கொடைக்கானலின் நுழைவுவாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி டோல்கேட்டில் கார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை டோல்கேட் ஊழியர்கள், நகராட்சி அலுவலர்கள், போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் யாரிடமும் இ-பாஸ் இல்லை. இதனால் தொடர்ந்து செல்லமுடியாது என கூறி அனைவரையும் திரும்பக் கேட்டுக்கொண்டனர். கார்களில் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் டோல்கேட் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருந்தபோதும் சிறிது நேரத்தில் இ-பாஸ் இன்றி கார், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைக் கொடைக்கானலுக்குள் நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.
கொடைக்கானலுக்குள் இ-பாஸ் இன்றி யாரும் அனுமதிக்கபடாத நிலையில் சிலர் மாற்றுப்பாதைகள் வழியாக கொடைக்கானலுக்குச் செல்கின்றனர். இதனால் கொடைக்கானலில் வெளிமாவட்ட நபர்கள் சில இடங்களில் உலா வருவது தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago