காரியாபட்டியில் திருநங்கையை காதலித்த இளைஞர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தில் தினகரன் மகன் கருப்பசாமி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.
பின்னர் அவரது பெயரை ஹரினா (24) என்று பெயர் மாற்றி கொண்டார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தாய்மாமன் கந்தசாமி மகன் கருப்பசாமி (27) டிரைவராக உள்ளார் இவர் ஹரினாவை காதலித்து வந்துள்ளார்.
கருப்பசாமி-திருநங்கை ஹரினாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களுடைய பெற்றோர்கள் பின்பு சம்மதம் தெரிவித்தனர்.
இதையெடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு காரியாபட்டி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
திருமணம் குறித்து மணமகன் கருப்பசாமி கூறுகையில், “நாங்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். நான் ஒரு திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று எனது பெற்றோரிடம் கூறியபோது, முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி, அவர்கள் சம்மதத்துடன் ஹரினாவை திருமணம் செய்துகொண்டேன்” என்று கூறினார். இவர்களது செயலை அப்பகுதியினர் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago