கரோனா பாதிப்பால் ஹெச்.வசந்தகுமார் காலமானதையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்துக்குள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஹெச்.வசந்தகுமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹெச்.வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி கடந்த ஆக. 28-ம் தேதி காலமானார்.
இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது. இதனை அதிகாரப்பூர்வமாக மக்களவை செயலகம் இன்று (செப். 4) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஹெச்.வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்துக்குள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
» நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி; வைகோ வாழ்த்து
» ஆசிரியர்கள் தினம்: ஆசிரியர்கள் தான் அனைவரின் உயர்வுக்கும் காரணம்; அன்புமணி வாழ்த்து
இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது குறித்த அறிவிப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago