மு.க.ஸ்டாலின் அணிக்கு மாறியதன் பின்னணியை விசாரிக்க அட்டாக் பாண்டிக்கு மேலும் 4 நாள் காவல் தேவை: நீதிபதியிடம் போலீஸார் மனு தாக்கல்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

திமுகவில் மு.க.ஸ்டாலின் அணிக்கு அட்டாக் பாண்டி மாறியது, வார பத்திரிகைக்குப் பேட்டி அளித்தது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸார் நீதிபதி யிடம் மனு தாக்கல் செய்தனர்.

பொட்டு சுரேஷ் கொலை வழக் கில் கைதான அட்டாக் பாண்டியிடம் போலீஸார் 4 நாட்கள் விசாரணை நடத்தி வந்தனர். அட்டாக் பாண்டி அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸார் நேற்று கூறியதாவது: தனது முன்னேற்றத்தை பொட்டு சுரேஷ் தடுத்தார். தன் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்ய வைத்தார். மு.க.அழகிரியிடம் நெருங்கவிடாமல் செய்தார். இதனால் தனக்கு அரசியல் எதிர் காலம் இல்லாமல் போய்விடும் என்பதற்காக கூட்டு சதி செய்து, தனது கூட்டாளிகள் மூலம் பொட்டு சுரேஷை கொலை செய்தேன்.

கொலைக்குப் பின்னர் கடந்த 33 மாதங்களாக பல்வேறு மாநிலங் களுக்குச் சென்று தலைமறைவாக இருந்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர். நேற்றுடன் விசாரணை முடிந்ததால், பந்தயத்திடல் சாலை யில் உள்ள நீதிபதி பாரதிராஜா வீட்டில் நேற்று மாலை 5.30 மணிக்கு அட்டாக் பாண்டியை போலீஸார் ஆஜர்படுத்தினர். போலீஸார் தன்னை துன்புறுத்தவில்லை என அட்டாக் பாண்டி தெரிவித்தார். ஏற்கெனவே அட்டாக் பாண்டிக்கு அக். 6-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், அவரை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்

அப்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியிலில் மு.க.அழகிரி பக்கத்தில் இருந்து, மு.க.ஸ்டாலினுடைய பக்கம் செல்ல மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி, சென்னை மா.சுப்பிரமணியன் ஆகியோரை அட்டாக் பாண்டி தொடர்புகொண்டு சில கோரிக்கைகளை வைத்துள் ளார், அவர் ஸ்டாலின் முகாமுக்கு மாறியது, ஒரு வார பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளது, மேலும் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளது குறித்து அட்டாக் பாண்டியிடம் விசாரிக்க வேண்டி யுள்ளது. இதற்காக மேலும் 4 நாட் கள் போலீஸ் காவலுக்கு அனு மதிக்க வேண்டும் என மனு தாக் கல் செய்தனர்.

இதற்கு அட்டாக் பாண்டி தரப்பில் ஆஜரான வழக் கறிஞர்கள் மணிகண்டன், தாமோ தரன் ஆகியோர் நீதிபதியிடம் அளித்த மனுவில், அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்கக் கூடாது என் றும், மதுரை சிறைக்கு மாற்றக் கோரியும், என்கவுன்ட்டர் செய்ய வுள்ளதாக தொடர்ந்து தகவல் வருவதாகவும் தெரிவித்தனர்.

காவலுக்கு அனுப்புவது குறித்து இன்று நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அவர் மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு வார் என போலீஸார் தெரிவித் துள்ளனர். அட்டாக் பாண்டியின் வாக்குமூலத்தையும் போலீஸார் நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்