ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் காரைக்காலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 7 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்துப் பலமுறை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், போராட்டங்கள் நடத்தியும் ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தியும், புதுச்சேரி அரசைக் கண்டித்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் காரைக்கால் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு இன்று (செப். 3) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே சென்ற முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் முதன்மைக் கல்வி அதிகாரியைச் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், போராட்டத்தைத் தொடர முயன்றதையடுத்து 125 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
» ஊரடங்கு காலத்திலும் காசநோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
» தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கக் கோரிய வழக்குகள் முடித்து வைப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago