காரைக்குடி மண்டலத்தில் 160 பஸ்களே இயக்கம்: பயணிகள் வராததால் நஷ்டம் 

By இ.ஜெகநாதன்

காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 160 பஸ்களே இயங்கிய நிலையிலும், பயணிகள் வராததால் நஷ்டம் ஏற்படுவதாக அரசு போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் செப்.1 முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என கூறி பஸ்களை இயக்க முடியாது என ஏற்கனவே தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலத்தைச் சேர்ந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 251 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் தற்போது 160 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பஸ்கள் பிற மாவட்டங்களுக்கு செல்லாததாலும், பொது போக்குவரத்து இல்லாமல் சொந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டதாலும், கரோனா அச்சம் காரணமாகவும் கடந்த 2 நாட்களாக பஸ்களில் பயணிகள் வருகை குறைந்தது.

இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ செப்.1-ம் தேதி முதல் நாள் என்பதால் தான் பயணிகள் வரவில்லை.

மறுதினத்தில் இருந்து சரியாகிவிடும் எனவும் நினைத்தோம். ஆனால் தொடர்ந்து பஸ்களில் பயணிகளின் வரத்து குறைவாக தான் உள்ளது.

இதனால் செப்.7-ம் தேதி முதல் வெளிமாவட்டங்களுக்கும் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தபோதிலும் கரோனா அச்சம் குறைந்தால் தான் பழையபடி பயணிகளின் வரத்து அதிகரிக்கும், என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்