பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அபராதமின்றி செலுத்தலாம் என, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (செப். 2) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறையின் முக்கிய வருவாய் இனங்களான சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உட்பட வரி வருவாய் இனங்கள், வரி வருவாய் அல்லாத இனங்கள் / கட்டணங்கள் சென்ற நிதி (2019-20) ஆண்டின் 31.03.2020-க்குள் சொத்து உரிமையாளர்கள்/ நிறுவனதாரர்களால் சட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி வரி வருவாய் இனங்களை வசூலிக்க இயலாத சூழ்நிலையில், செலுத்த வேண்டிய வரி வருவாய் இனங்களை (தொழில் வரி, தொழில் உரிமம் உட்பட), எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் செலுத்த ஏதுவாக காலக்கெடு 30.06.2020 வரை ஒத்திவைக்க அரசால் ஆணையிடப்பட்டது.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி (தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு) எவ்வித அபராதம் மற்றும் தண்டத்தொகையின்றி 30.09.2020-க்குள் செலுத்தலாம் என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago