மதுரை மாநகராட்சியில் காலி மனை வரிவிதிப்பில் இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்பட்டு மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் வீடு தேடிச் சென்று வரி நிர்ணயம் புசெய்யும் திய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 100 வரை உள்ள வார்டுகளில் இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி விரைவாக காலிமனை வரிவிதிப்பு செய்ய மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக குடியிருப்பு முகவரி, தொலைபேசி எண் மற்றும் வரிவிதிப்பு செய்யப்பட வேண்டிய காலிமனையின் முகவரி தெரிவித்தால் போதும்.
உங்கள் இல்லம் தேடி மாநகராட்சி வருவாய் உதவியாளர்கள் வரிவிதிப்புக்கு தேவையான ஆவணங்களை பெற்று உடனடியாக வரிவிதிப்பு செய்து உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக தனி மின்னஞ்சல் முகவரியும்( mducorpvst@gmail.com)வாட்ஸ் அப் எண்ணும் (842 842 5000)வழங்கப்பட்டுள்ளது.
» சாடியாற்றில் குளிக்க வரும் சுற்றுலாப் பிரியர்கள்; கரோனா அச்சத்தில் சாடிவயல் கிராமவாசிகள்!
ரூ.10 மதிப்புள்ள காலிமனை விண்ணப்பத்தை வீட்டிற்கு வரும் வருவாய் உதவியாளர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நடைமுறையில் வரி நிர்ணயம் செய்ய பொதுமக்கள், தங்கள் காலி மனையின் பட்டா நகல், பதிவு பெற்ற பத்திர நகல், வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களை நோட்டரி பப்ளிக் மூலம் சான்று பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது சம்பந்தமாக மதுரை மாநகராட்சியில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை(842 842 5000)எண்ணில் வாட்ஸ் அப் செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago