ஓராண்டாக தாமதமாகும் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு: விரைவில் வழங்க எஸ்.ஐ.கள் வலியுறுத்தல்

By என்.சன்னாசி

தமிழக காவல் துறையில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்குவது வழக்கம். இதன்படி கடந்த 2008-ல் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 500 எஸ்.ஐ.களுக்குப் பதவி உயர்வுப் பட்டியல் ஓராண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் 50 பேர் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற் றுள்ளனர். மீதம் உள்ளவர்கள் தொடர்ந்து எஸ்.ஐ.களாகவே பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் பதவி உயர்வு கிடைக்காத எஸ்.ஐ.கள் கூறிய தாவது: மதுரை உட்பட பல மாவட்டங்களில் ஆய்வாளர்கள் காலிப் பணியிடம் இருந்தும் பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்காதது அதிருப்தி அளிக்கிறது. 2004-ல் தேர்வான சுமார் 900 பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஒரே நேரத்தில் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் காவல் துறைக்கான ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பெண் ஆய்வாளர்களே அதிகமாகப் பணி புரிகின்றனர். 4 காவல் நிலையங்களைக் கொண்ட காவல் உட்கோட்டத்தில் 3 பெண் ஆய்வாளர்கள் வரை பணிபுரிவதால் சட்டம்-ஒழுங்கு, குற்றங்களைத் தடுப்பதில் பெரும் சவால் உள்ளது. இரவு ரோந்து, முக்கிய பாதுகாப்புகளை கையாளுவதில் ஆண் ஆய்வாளர்கள் அவசியமாகின்றனர். சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரிய பெண் ஆய்வாளர்கள் தயக்கம் காட்டும் சூழலில் எங்களுக்குப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு, தேர்தல் பணிகளை எளிதில் எதிர் கொள்ள ஏதுவாக பதவி உயர்வை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்