தொடர்ந்து சிதைக்கப்படுவதால் வரலாற்று சிறப்பை இழந்து வரும் உத்தமபாளையம் சமணர் மலை

By என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் சமணர் மலையின் தொன்மை தெரியாமல் பலரும் இதனை பல்வேறு விதங்களில் சிதைத்து வருகின்றனர். எனவே தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்குணகிரி சமணர் மலையில் சிதைக்கப்பட்டுள்ளசிற்பங்கள். (உள்படம்) சோ.பஞ்சுராஜா உத்தமபாளையம் கோம்பை சாலையில் திருக்குணகிரி சமணர் மலை உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மலைப் படுகையில் சமணர்கள் வசித்து வந்தனர்.

இந்த மலையில் ஏராளமான புடைப்புச் சிற்பங்களை அவர்கள் வடிவமைத்துள்ளனர். பாண்டிய மன்னர்கள் காலத்துக்குப் பிறகு, சைவ மதம் எழுச்சி பெற்றதால், சமணர்கள் கழுவேற்றம் செய்யப் பட்டனர். இதனால் அவர்கள் பலரும் இடம் பெயர்ந்து விட்டனர். தற்போது இந்த திருக்குணகிரி மலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் எவ்வித பராமரிப்போ, கண்காணிப்போ இல்லை. இதனால் இந்த மலை பலவிதங்களிலும் சிதைந்து வருகிறது.

உடைந்து கிடக்கும் சிற்பங்கள், சுனை அருகே மது அருந்துதல், திறந்தவெளி கழிப்பிடம் என்று இந்த இடம் தனது வரலாற்று சிறப்புத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது.

மலையைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை யும் சிதைத்து வைத்துள்ளனர். எனவே, தொல்லியல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சோ.பஞ்சுராஜா கூறுகையில், சமணர்கள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதவர்கள்.

நடக்கும்போது கூட சிறிய உயிர்களை மிதித்து விடக் கூடாது என்பதற்காக, மயிலிறகால் கூட்டிக் கொண்டே செல்வர். வரலாறுகளில் சமணர்களுக்கு என்று தனி இடம் உண்டு. எனவே இந்த இடத்தைப் பராமரித்து பள்ளி மாணவர்கள் வந்து செல்லவும், சுற்றுலாப் பகுதியாகவும் மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.

தொல்லியல் துறையினர் கூறுகையில், எங்கள் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவாகத்தான் உள்ளது. எனவே பராமரிப்பு, ஊழியர் நியமனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்