இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்குக் கடத்த முயன்ற 5.5 கிலோ தங்கக் கட்டிகளை அந்நாட்டுக் கடற்படையினர் பறிமுதல் செய்து 2 மீனவர்களைக் கைது செய்தனர்.
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் காங்கேசன் கடற்பகுதியிலிருந்து அனலை தீவு அருகே நேற்று அதிகாலை இலங்கைக் கடற்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த பைபர் படகை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் படகில் இருந்த நபர்கள் ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பொட்டலங்களில் இருந்த 26 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து 2 மீனவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 5.5 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு. ரூ. 2.75 கோடி ஆகும்.
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மதகல் பகுதியைச் சார்ந்த 2 மீனவர்களும் கூலிக்கு தங்கம் கடத்தியதாகத் தெரிகிறது. இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் குறித்து யாழ்ப்பாணத்தில் சுங்கத் துறையினர் விசாரிக்கின்றனர்.இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago