காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கரோனா பாதிப்பு காலத்தில் வேலைவாய்ப்பை இழந்து நலிவடைந்த சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க ரூ.1.77 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு ஊரக புத்தாகத் திட்டத்தின் கீழ் ரூ.75.50 லட்சம் மதிப்பில் 18 உற்பத்தியாளர் குழு மற்றும் 4 தொழில் குழுக்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் 18 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி கடனுதவியாக ரூ.1.02 கோடி வழங்கப்பட்டது. மொத்தமாக 40 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் ஜி.சீனுவாசராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago