கோமல் அன்பரசனுக்கு 'ஊடகவியல் செல்வர்' விருது; தருமபுரம் ஆதீன மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது

By கரு.முத்து

ஊடகவியலாளர் கோமல் அன்பரசனுக்குத் தருமபுரம் ஆதீன மடத்தின் சார்பில் 'ஊடகவியல் செல்வர்' என்ற விருது அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள பாரம்பரிய சைவத் திருமடமான தருமபுரம் ஆதீனத்தின் ஆவணி மூலப்பெருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி 28-ம் தேதிவரை தருமபுர மடத்தில் நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு தருமபுரம் ஆதீன மடத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. ஆவணி மூலப் பெருவிழாவில் இப்படியான விருதுகள் வழங்குவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு மரபாகும்.

இதில் ரா.பி.சேதுப்பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை உட்பட ஏராளமான அறிஞர்கள், பிரமுகர்கள் விருது பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஊடகவியலாளரும், காவிரி இயக்கத்தின் தலைவருமான கோமல் அன்பரசன் உட்பட நான்கு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தருமபுர ஆதீன மடத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், கோமல் அன்பரசனுக்கு ‘ஊடகவியல் செல்வர்’ விருதையும், சென்னை சிவகுமாருக்கு ‘சித்தாந்த கலாநிதி’ விருதையும், குடந்தை சவுந்திர ராஜனுக்கு ‘கல்விக் காவலர்’ என்ற விருதையும், சீர்காழி ராமதாஸுக்கு ‘ஆன்மீக பதிப்புச் செம்மல்’ விருதையும் வழங்கிப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்