கஞ்சா வழக்கில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரிடம், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக, கஞ்சா வியாபாரி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சா வியாபாரி அந்தோணி(45). இவர் மீது பல்வேறு காவல் நிலை யங்களில் கஞ்சா வழக்குகள் நிலு வையில் உள்ளன. கஞ்சா விற்ப னையில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையை எஸ்பி பத்ரிநாராயணன் வேகப்ப டுத்தியுள்ளார். தனிப்படை எஸ்.ஐ. சாம்சன் தலைமையில் போலீஸார் புதுகிராமத்துக்கு சென்றனர்.
அங்கு, அந்தோணியின் வீட்டை தனிப்படையினர் சுற்றி வளைத்த னர். அப்போது வீட்டுக்குள் இருந்த அந்தோணி, கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்தார். இரு காஸ் சிலிண்டர்களை தங்கள் முன் வைத்துக்கொண்டு, போலீஸார் தன்னைப் பிடிக்க வந்தால் சிலிண்டரைத் திறந்து, தீவைத்து வெடிக்கச்செய்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
வீட்டின் வெளியில் நின்று இதனைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்தோ ணியை கைது செய்யாமல் போலீ ஸார் அங்கிருந்து திரும்பிச் சென்ற னர். காஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுக்கும் வீடியோவையும் சமூக வலைத ளங்களில் அந்தோணி பரவவிட் டார். சுசீந்திரம் போலீஸார் கூறும் போது, ``அந்தோணி மீது கஞ்சா விற்பனை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரைப் பிடிக்க முயன்றபோது, காஸ் சிலிண்டர்களை வைத்து தற் கொலை மிரட்டல் விடுத்தார். விபரீ தம் நடந்துவிடக் கூடாது என்பதால் திரும்பி வந்துவிட்டோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago