புகார் அளிக்க வசதியாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ் அப் எண்: சென்னை காவல்துறை வெளியிட்டது

By செய்திப்பிரிவு

பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள 12 துணை ஆணையர்களின் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் ஜூலை 3-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு (Whats App Video Call ) வழியாக எளிதில் தொடர்புகொண்டு (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை) புகார்கள் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளை அடுத்து தமிழக முதல்வர் உத்தரவின்படி இந்த வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு வழியாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 27-ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கரோனா காலத்தில் வெளியூர் சென்று வந்துள்ள அனைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மீண்டும் இவ்வசதியின் விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, பொதுமக்கள் தங்களது குறைகளை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட துணை ஆணையாளர்களிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்களின் விவரங்கள்

1. துணை ஆணையாளர், புனித தோமையார் மலை மாவட்டம் 70101 10833.

2. துணை ஆணையாளர், அடையாறு மாவட்டம் 87544 01111.

3. துணை ஆணையாளர், தியாகராய நகர் மாவட்டம் 90030 84100.

4. துணை ஆணையாளர், மைலாப்பூர் மாவட்டம் 63811 00100.

5. துணை ஆணையாளர், திருவல்லிக்கேணி மாவட்டம் 94981 81387.

6. துணை ஆணையாளர், கீழ்ப்பாக்கம் மாவட்டம் 94980 10605.

7. துணை ஆணையாளர், பூக்கடை மாவட்டம் 94980 08577.

8. துணை ஆணையாளர், வண்ணாரப்பேட்டை மாவட்டம் 94981 33110.

9. துணை ஆணையாளர், மாதவரம் மாவட்டம் 94981 81385.

10. துணை ஆணையாளர், புளியந்தோப்பு மாவட்டம் 63694 23245.

11. துணை ஆணையாளர், அண்ணாநகர் மாவட்டம் 91764 26100.

12. துணை ஆணையாளர், அம்பத்தூர் மாவட்டம் 91764 27100.

மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சுருக்கமாக வாட்ஸ் அப் தகவல் வழியாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 63691 00100 என்ற எண்ணில் அனுப்பலாம். அக்குறைகளை ஆராய்ந்த பின்னர் தேவைப்படும் புகார்தாரர்களை காவல் ஆணையர் வீடியோ கால் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்வார்.

பிற சாதாரண குறைகள், சம்பந்தப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையர்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்