அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி உடலநலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகிலுள்ள ஓரடியம்புலம் ஆகும். ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஓ.எஸ்.மணியனின் மனைவி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்றிரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு, அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் சொந்த ஊரான ஓரடியம்புலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
அமைச்சரின் மனைவி மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago