சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், வீரக்கல்புதூர் கிராமம், புதுசாம்பள்ளி பகுதியில், 26.8.2020 அன்று ரயில்வே துறைக்குச் சொந்தமான சுற்றுச் சுவரை வலுப்படுத்தும் பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கவிதா என்பவர் சிகிச்சைப் பலனின்றி இறந்ததையடுத்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, கவிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் அளிக்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக இன்று வெளியான அறிக்கை:
சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், வீரக்கல்புதூர் கிராமம், புதுசாம்பள்ளி பகுதியில், 26.8.2020 அன்று ரயில்வே துறைக்குச் சொந்தமான சுற்றுச் சுவரை வலுப்படுத்தும் பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், சீரமைப்புப் பணியினை மேற்கொண்டிருந்த 13 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர் எனவும், அவர்களுள் திரு. ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி திருமதி கவிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருமதி கவிதா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருமதி கவிதா அவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago