திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான்: நாஞ்சில் சம்பத் பேச்சு

By செய்திப்பிரிவு

திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான் என, பொன்னேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களின் நலன் காக்கும் தலைவர் என கருணாநிதி பொய் வேஷம் போடுகிறார். ஏழு தமிழர் களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு கெடு விதித்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட் டுள்ள 7 தமிழர்களை விடுவிக்க மறுக்கும் காங்கிரஸ் கட்சிதான், மகாத்மா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவித்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநில வருவாய்த் துறை அமைச்சர் ரமணா, பொன்னேரி எம்எல்ஏ பொன்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேணுகோபாலை ஆதரித்துப் பேசும் நாஞ்சில் சம்பத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்