மதுரையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நடந்த 1500 பவுன் கொள்ளையில் முக்கியத் தடயங்கள் சிக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
2019 பிப்ரவரியில் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் நகை அடகுக் கடையில் 1500 பவுன் நகை கொள்ளை போனது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை.
இச்சம்பவத்துக்குப் பின் சில மாதங்களில் திருச்சியில் உள்ள நகைக்கடையில் நடந்த கொள் ளையில் முக்கிய நபரான முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்க ளுக்கு மதுரை அடகுக் கடை கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கொள்ளையர்களைப் பிடிக்க தற்போதைய குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார், எஸ்ஐ தென்னரசு தலைமையிலான தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் பழனிக்குமார் கூறுகையில், இந்த வழக்கில் முக்கியத் தடயங்கள் கிடைத்துள் ளன. திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கிய முருகன், அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதுகிறோம். அவர்களிடம் விசாரித்தால் துப்புத் துலங்கும்.
தற்போது சிறையில் இருக்கும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடியாத சூழல் உள்ளது. ஜாமீனில் வந்தால் விசாரிக்கக் காத்திருக்கிறோம். கொள்ளையர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago