தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் சலீம்(42), நகைக்கடை உரிமையாளர். இவர் கடந்த ஜூலை 20-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கரோனா தொற்று உள்ளதாகக் கூறிய மருத்துவமனை நிர்வாகம், அதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜூலை 29-ம் தேதி சலீம் இறந்துவிட்டதாக கூறியது. அன்று மாலை 4 மணிக்கு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றே பட்டுக்கோட்டை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மையவாடியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சலீமின் மனைவி சர்மிளா, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பட்டுக்கோட்டை உதவி ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: கரோனோ விதிமுறை அமலில் இருப்பதாகக் கூறி சலீமின் உடலை குடும்பத்தினரிடம் காட்டவில்லை. இதனால் என் கணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. முக்கியமாக 12 மணி நேரம் காலதாமதமாக உடலை ஒப்படைத்ததால் கணவரின் உடல் உள்ளுறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. அரசால் வெளியிடப்பட்டுள்ள கரோனாவால் இறந்தவர்கள் பட்டியலில் என் கணவரின் பெயர் இல்லை. என் கணவரின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago