சங்ககிரி அருகே சிவனடியார் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த தேவூர் புளியம்பட்டி, குண்டாங்கல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் சரவணன் (42). இவர் கடந்த 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாக சரவணன் வீடியோ பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
சிவனடியார் தற்கொலை வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் துறைரீதியான விசாரணை நடத்த எஸ்பி தீபா காணிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சென்ற காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் விடுப்பு முடிந்து நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார்.
இதனையடுத்து, டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான குழுவினர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேலிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், சங்ககிரி இன்ஸ்பெக்டர் முத்துசாமி, தற்கொலை வழக்கை விசாரணை செய்து வரும் நிலையில், சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்த சேலம்தலைமை நீதித்துறை நடுவரிடம்மனு அளித்துள்ளார். அந்த மனுசங்ககிரி நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சாட்சிகளிடம் ரகசிய விசாரணை விரைவில் நடத்தப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago