இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

தமிழகத்திலிருந்து நடைமுறையில் இருக்கும் இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரித் தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
’’கரோனா பரவலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி மக்கள் நெரிசலைக் குறைக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையில் அத்தியவாசியத் தேவைக்குச் செல்வதற்காக இ-பாஸ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் பலர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி மன உளைச்சலில் உள்ளனர்.

திருமணம், இறப்பு மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக செல்வோர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கின் போது இவற்றுக்குச் சான்றிதழ்கள் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. எனவே இ-பாஸ் தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஜூலை 31-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்