மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ஆர்டிஓ அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும், மத்திய - மாநில அரசுகளே ஊரடங்கு காலத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு 3 காலாண்டுக்கான சாலை வரியை ரத்துசெய்ய
வேண்டும். வாகனக் கடன் தவணைக்கான வட்டியை ரத்து செய்து, தவணையைக் கட்ட மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க நிதி நிறுவனங்களுக்கு உத்திரவிட வேண்டும்.
சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். காலாவதியான வாகன காப்பீட்டை 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
» ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் : கைது செய்யக்கூடாது: சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் தடை
» புதிய பாம்பன் பாலம் பணியை செப்.,2021-ல் முடிக்க இலக்கு: கோட்ட மேலாளர் லெனின் தகவல்
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். டீசல் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், காளிமுத்து ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில், நாளை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டது.பின்னர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago