அரசு போக்குவரத்து சேவையை முடக்கி தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்க சட்ட திருத்தமா?- முத்தரசன் கண்டனம்

By செய்திப்பிரிவு

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுப்பது. அதற்கான ஒப்பந்தம் செய்வது. பாதை ஒதுக்குவது என எல்லா நிலைகளிலும் கமுக்கமாக “கல்லாக் கட்டும்” செயலில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வன்மையாகக் கண்டிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழிவகைகளை கண்டறிவதற்கு மாறாக, ‘இ’ - வாகனக் கொள்கை 2019 என்ற பெயரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட விதிகள் 1989-ஐ திருத்தியுள்ளது.

கரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக, பொதுப் போக்குவரத்தை முடக்கி வைத்து ஐந்து மாதங்களாகும் நிலையில். அதனை தனியார் கைக்கு மாற்றி விடும் மக்கள் விரோதச் செயலில் ஈடுபட்டு வருவதை எதிர்த்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களை இணைத்து, இரவு, பகலாக இயங்கி வரும் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் தினசரி 2.5 கோடி மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளர்கள், கலைஞர்கள், மொழிப்போர் தியாகிகள், சட்டமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள் என பல தரப்பினருக்கு இலவசமாகவும். சலுகை கட்டணத்திலும் சேவை அளித்து வருகின்றது. இவை அனைத்தையும் ரத்து செய்யும் நோக்கம் கொண்டுள்ளது.

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுப்பது, அதற்கான ஒப்பந்தம் செய்வது. பாதை ஒதுக்குவது என எல்லா நிலைகளிலும் கமுக்கமாக “கல்லாக் கட்டும்” செயலில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, வன்மையாகக் கண்டிக்கிறது.

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்க வழி செய்யும், மோட்டார் வாகன சட்ட விதிகள் 1989ஐ திருத்தம் செய்து, புதிதாக பிரிவு 288 ஏ என்பதை கூடுதலாக சேர்த்து ஜுலை 27 ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யுமாறு தமிழக அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்