மதுரையில் நாளிதழ் அலுவலகத் தில் பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டு, 3 ஊழியர்கள்கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் விடுதலையானதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உயர் நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தினகரன் நாளிதழில் திமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு வெளியானது. இதையடுத்து தினகரன் அலுவல கம் மீது கடந்த 9.5.2007-ல் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அலுவலக ஊழியர்கள் வினோத், கோபி, பாதுகாவலர் முத்துராம லிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அட் டாக் பாண்டி, அவரது கூட்டாளிகள் 16 பேர் மற்றும் பாதுகாப்பு வழங்க தவறியதாக டி.எஸ்.பி. ராஜா ராம் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் சாட்சிகள் பலர் பின்னர் பிறழ்சாட்சியாக மாறி னர். இதையடுத்து, இந்த வழக்கி லிருந்து அட்டாக் பாண்டி உள்பட 17 பேரையும் விடுதலை செய்து மதுரை அமர்வு நீதிமன்றம் 9.12.2009-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட வினோத் தின் தாயார் பூங்கொடியும், அட்டாக் பாண்டி உள்பட 17 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
பல மாதங்களாக நிலுவையில் இருந்துவரும் இவ்விரு மனுக் களும் சமீபத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, அட் டாக் பாண்டி உள்பட 15 பேரின் வழக்கறிஞர்களும், அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜ ராவதில் இருந்து விலகிக் கொள் வதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் சார்பில் ஆஜராக இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞரை நியமனம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அட்டாக் பாண்டி உள்பட 15 பேருக்காக ஆஜராக வழக்கறிஞர் என்.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட் டிருந்தது. ஆனால் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago