மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 ஏக்கரில் ரூ.45 கோடியில் உருவாகும் கலாச்சார மையத்தில் 200 முதல் 3500 பேர் அமரக்கூடிய உள் அரங்குகள் அமைகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்தார்.
ராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானம், பாரம்பரியமிக்கது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பெரிய அரசியல் கட்சித்தலைவர்கள் பேசிய அரசியல் கட்சி மாநாடுகள், இந்த தமுக்கம் மைதானத்தில் நடந்துள்ளன.
மன்னர்கள் ஆட்சியில், ஜல்லிக்கட்டு, கத்தி சண்டை, வாள் சண்டை போன்ற போட்டிகளும், அதற்கான பயிற்சி வழங்கும் மைதானமாகவும் தமுக்கம் இருந்து வந்தது.
இந்த மைதானத்தில் தற்போது மாநகராட்சி சார்பில் ரூ.45.55 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கலாச்சார மையம்(Convention Centre) கட்டப்படுகிறது. கரோனா ஊரடங்கிலும் இந்த கலாச்சார மையம் கட்டுமானப்பணி தடைப்படாமல் சுறுசுறுப்பாக நடக்கிறது.
» உதவி காவல் ஆய்வாளர் பணித் தேர்வில் முறைகேடு: மூவர் குழு விசாரணைக்கு உத்தரவு
» சாத்தான்குளம் விவகாரம்: மதுரையில் மீண்டும் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் இந்த பணிகளை முடிக்க மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தமுக்கம் மைதானத்தில் மொத்தம் 9.68 ஏக்கர் பரப்பரளவில் நிலம் உள்ளது. இதில், சுமார் 2.47 ஏக்கர் பரப்பளவில் தரைமட்டத்திற்கு கீழ் ஒரு தளம் மற்றும் தரைதளத்துடன் இந்த கலாச்சார மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்தில் தரைமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் 250 நான்கு சக்கர வாகனம் மற்றும் 215 இரு சக்கர வாகனம் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், தொழில் மற்றும் வர்த்தக பொருட்காட்சி நடத்துவதற்கும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் 200 நபர்கள் முதல் 3500 நபர்கள் வரை பங்கு கொள்ளும் வகையில் பல்வேறு அளவில் உள் அரங்கத்தினை மாற்றி அமைக்கும் வசதிகளுடன் கூடிய அரங்கம் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது, ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago